வெற்றி பெற வேண்டுமா?

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே.

குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா

"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"


Saturday, July 31, 2010

புரிதல் இல்லாத உள்ளங்கள் பார்க்கிறேன


நேற்றைய
மனநிலை
இன்று
இல்லை

இன்று
இருப்பது
நாளை
இருக்க
போவதுமில்லை

கண்விழிக்கும்
ஒவ்வொரு
விடியலிலும்-

புது
உலகம்
பார்க்கிறேன்..

புரிதல்
இல்லாத
உள்ளங்கள்
பார்க்கிறேன்.......

புண்படுத்தும்
மனிதர்கள்
பார்க்கிறேன்...

இது தான்
வழி
இது தான்
பயணம்
இது தான்
வாழ்க்கை

என்ற
எளிமை
சிந்தனையோடு
உள்ளத்தால்
இருக்க
முடிவதில்லை...

முடியாத
தருணங்களில்
முடிவு
சலனமற்ற
உடலும்
மனமும்..!!

சலனமற்றதை
பிணம்
என்று
கூட
சொல்லலாம்..